இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர், "மாநில அரசு மக்களுக்கு எதிரான பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தத் தொடங்கியுள்ளது. மக்கள் சார்ந்த அமைப்புகள், இதனை எதிர்த்து அறவழியில் போராடிவருகின்றன. இருப்பினும், மாநில அரசு காவல் துறையை ஏவி, அடக்குமுறையைப் பின்பற்றிவருகிறது.
இது ஜனநாயகப் படுகொலையாகும். கூடங்குளம், காவிரி, மீத்தேன், ஜல்லிக்கட்டு, எட்டு வழிச்சாலை, நீட், புதிய கல்விக் கொள்கை, சுற்றுச்சூழல் மாசுபாடு உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு உரிமை சார்ந்த, வாழ்வாதாரப் பிரச்சினை போராட்டங்களில் பங்கெடுத்த அரசியல் கட்சி, இயக்கங்களைச் சேர்ந்த தலைவர்கள், தோழர்கள், பங்கேற்பாளர்கள், பொதுமக்கள் மீது அதிமுக அரசினால் போடப்பட்டுள்ள பொய்யான, புனையப்பட்ட வழக்குகளை உடனடியாக ரத்துசெய்ய வேண்டும். பொய் வழக்குகளை அரசு திரும்பப் பெற வேண்டும்" என்றார்.