தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் எல்.முருகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு நீண்ட நாள்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அவர் நேற்று இரவு மறைந்தார் என்ற செய்தி வேதனை அளிக்கிறது. தொகுதி மக்களுடன் நன் மதிப்பை பெற்ற துரைக்கண்ணு விவசாயிகளின் நலனுக்காக பாடுபட்டவர். அவர் மீண்டு வந்துவிடுவார் என்று நாம் பிரார்த்தித்தோம். ஆனால் நம்மை விட்டு மறைந்துவிட்டார் .
அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் நண்பர்கள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தனது பேஸ்புக் பதிவில், "வேளாண் துறை அமைச்சராக , பாபநாசம் சட்டப்பேரவை உறுப்பினராக , சிறப்பாகவும் , எளிமையாகவும் மக்களுடைய பிரச்னைகளை தீர்க்க கூடியவராக செயல்பட்ட துரைக்கண்ணுவின் மறைவு தஞ்சை மாவட்டத்திற்கும் , அதிமுகவிற்கும் பேரிழப்பாகும் .