தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மக்கள் பணியாற்றிய பெருந்தகை- இரங்கல் தெரிவித்த அதிமுக - ADMK Mourns for Agriculture Minister R Doraikannu

சென்னை: சிறந்த முறையில் மக்கள் பணிகளை ஆற்றி வந்த பெருந்தகை வேளாண்மைத் துறை அமைச்சர் துரைக்கண்ணு என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Condolence from ADMK Mourns for Agriculture Minister R Doraikannu
Condolence from ADMK Mourns for Agriculture Minister R Doraikannu

By

Published : Nov 1, 2020, 11:16 AM IST

அந்த இரங்கல் செய்தியில், "தஞ்சாவூர் வடக்கு மாவட்ட கழகச் செயலாளரும், வேளாண்மைத் துறை அமைச்சருமான துரைக்கண்ணு உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த செய்தி கேட்டு மிகுந்த துயரும் மனவேதனையும் அடைந்தோம்.

இவர் மறைந்த முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் மீதும், கழகத் தலைமையின் மீதும் மிகுந்த விசுவாசம் கொண்டிருந்தவர். ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணித் தலைவராக இருந்து ஒன்றியக் கழகச் செயலாளர், மாவட்டக் கழகச் செயலாளர் என கழகப் பணிகளை ஆற்றிவந்தவர்.

2006,2011,2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை பொதுத் தேர்தல்களில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் 2016ஆம் ஆண்டு வேளாண்மைத் துறை அமைசச்ராக பொறுப்பேற்று சிறந்த முறையில் மக்கள் பணிகளை ஆற்றி வந்த பெருந்தகை அவர்.

இவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் இந்தத் துயரை தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தியையும், தைரியத்தையும் அளிக்க வேண்டும். அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெறவும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம் " எனக் குறிப்பிட்டுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details