சென்னை: சமூக வலைத்தளத்தில் பட்டியல் இனமக்களைப் பற்றி அவதூறான வகையில் பேசி, நடிகை மீரா மிதுன் காணொலி வெளியிட்டார்.
இந்த விவகாரத்தில் கேரளாவில் பதுங்கி இருந்த நடிகை மீரா மிதுனை ஆகஸ்ட் 14ஆம் தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் மீரா மிதுனின் நண்பர் சாம் அபிஷேக்கும் கைது செய்யப்பட்டார்.
தொடர்ந்து இருவரும் தங்களுக்குப் பிணை வழங்கக் கோரி மனு தாக்கல் செய்தனர். அதனை நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் மீண்டும் அவர்கள் பிணை கேட்டு மனு தாக்கல் செய்திருந்தனர்.