தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சொத்து பிரச்னை: அரசைக் கண்டித்து பெண் தற்கொலை முயற்சி - முதலமைச்சர் ஸ்டாலின்

சொத்து பிரச்னை காரணமாக சென்னை தலைமைச்செயலகத்தில் பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

சொத்து பிரச்சனை காரணமாக திமுக அரசை கண்டித்து : பெண் தற்கொலை முயற்சி
சொத்து பிரச்சனை காரணமாக திமுக அரசை கண்டித்து : பெண் தற்கொலை முயற்சி

By

Published : Oct 14, 2022, 5:11 PM IST

Updated : Oct 14, 2022, 5:26 PM IST

சென்னை: கும்பகோணத்தைச்சேர்ந்தவர் விமலா. இவரது பூர்வீகச்சொத்தை மாநகராட்சிக்கு குத்தகைக்கு விட்டுள்ளார். ஆனால், தற்போது குத்தகை முடிந்த பின்னரும் விமலாவின் நிலத்தை மாநகராட்சி திரும்ப ஒப்படைக்கவில்லை எனக்கூறப்படுகிறது.

இதுதொடர்பாக கும்பகோணம் மாநகராட்சி ஆணையர், மேயர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பலமுறை புகார் கொடுத்தும் தனது நிலத்தை மாநகராட்சி நிர்வாகம் ஒப்படைக்கவில்லை என்றும், இதைத் தொடர்ந்து விமலா தலைமைச்செயலகத்தில் உள்ள முதலமைச்சர் தனிப்பிரிவிலும் புகார் கொடுத்தும் தனக்கு சொந்தமான நிலத்தை ஒப்படைக்காமல் காலம் தாழ்த்தியும் வந்துள்ளனர்.

இதனால் மன உளைச்சல் அடைந்த விமலா இன்று சென்னை தலைமைச்செயலகத்தில் வந்து தனது நிலத்தை கொடுக்காமல் மறுத்து வரும் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும், திமுக அரசைக் கண்டித்தும் தனது உடலில் மண்ணெண்ணைய் ஊற்றி தற்கொலை செய்ய முயன்றுள்ளார்.

உடனடியாக அங்கு வந்த காவல்துறையினர் அவர் வைத்திருந்த மண்ணெண்ணெய் பாட்டிலை பறித்து அவர் மீது தண்ணீரை ஊற்றிக் காப்பாற்றினர்.

சொத்து பிரச்னை: அரசைக் கண்டித்து பெண் தற்கொலை முயற்சி

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமைச்செயலகத்தை விட்டு சென்ற ஐந்து நிமிடத்திற்குள் இந்தச்சம்பவம் நடைபெற்று உள்ளது. இந்தச் சம்பவம், தலைமைச் செயலக ஊழியர்கள் மற்றும் காவலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:உயர் நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்த வேல்முருகனின் உடல் அவரது முதல் மனைவியிடம் ஒப்படைப்பு

Last Updated : Oct 14, 2022, 5:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details