தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பத்திரிகையாளர் தாக்குதலை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்! - சென்னை அண்மைச் செய்திகள்

வேலூரில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர், ஒளிப்பதிவாளர் தாக்கப்பட்டதைக் கண்டித்து, தென்னிந்திய பத்திரிக்கையாளர் யூனியன் சார்பில் ஆவடியில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பத்திரிகையாளர் கண்டன ஆர்ப்பாட்டம் தொடர்பான காணொலி
பத்திரிகையாளர் கண்டன ஆர்ப்பாட்டம் தொடர்பான காணொலி

By

Published : Oct 7, 2021, 10:08 PM IST

சென்னை: வேலூர் மாவட்டத்தில் நேற்று (அக்.6) நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு குறித்த செய்திகளை சேகரிப்பதற்காக செய்தியாளர்கள் களப்பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர், ஒளிப்பதிவாளர் ஆகியோர் அரசியல் கட்சியினரால் தாக்கப்பட்டனர். பத்திரிகையாளர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை தெரிவித்தனர்.

நடவடிக்கை தேவை

இந்நிலையில் தமிழ்நாட்டில் பத்திரிகை, ஊடகவியலாளர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதை கண்டித்து, தென்னிந்திய பத்திரிகையாளர்கள் யூனியன் மாநில தலைவர் ராஜா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பத்திரிகையாளர் கண்டன ஆர்ப்பாட்டம் தொடர்பான காணொலி

ஆவடி பேருந்து நிலையம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பத்திரிகையாளர்கள், தாக்குதலில் ஈடுபட்டவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கக்கோரி முழக்கமிட்டனர்.

மேலும் முன் களப்பணியாளர்களாக அறிவிக்கப்பட்டிருக்கும் பத்திரிகையாளர்கள் மீது நடைபெறும் தாக்குதல்களுக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் பத்திரிகையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:அவதூறு வழக்கில் ஹெச். ராஜாவுக்கு பிடிவாரண்ட்!

ABOUT THE AUTHOR

...view details