தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

துறை ரீதியான 'கண்டன' நடவடிக்கை விருப்ப ஓய்வை பாதிக்காது - நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அரசு ஊழியர்கள் மீது 'கண்டனம்' என்ற வகையில் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தாலும், அது விருப்ப ஓய்வுக்கு தடையாக இருக்காது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

Madras high court
சென்னை உயர் நீதிமன்றம்

By

Published : Oct 6, 2020, 2:08 AM IST

சேலம் மாவட்டம் கறுப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 37 ஆண்டுகளாக ஆசிரியராக பணியாற்றிய ராஜூ, கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் விருப்ப ஓய்வு கோரி விண்ணபித்தார்.

ஆனால் விண்ணபத்தின் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால், விருப்ப ஓய்வு கிடைக்காத நிலையில் அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி பார்த்திபன் முன் விசாரணைக்கு வந்தது, அப்போது அரசு தரப்பில், தவறான நடவடிக்கை என்ற குற்றச்சாட்டில் துறைரீதியாக ஆசிரியர் ராஜுவின் செயலுக்கு கண்டனம் என நடவடிக்கையை எடுக்கப்பட்டதன் காரணமாக, விருப்ப ஓய்வு வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.

மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் நீலகண்டன் ஆஜராகி, துறை ரீதியான நடவடிக்கைகளில் கண்டனம் தெரிவிப்பது என்பது மிக பெரிய தண்டனை இல்லை என வாதம் வைக்கப்பட்டது.

இதைப் பதிவு செய்த நீதிபதி, அரசு துறையில், துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கைகளில் குறைந்தபட்ச தண்டனையான 'கண்டனம்' என்பது மட்டுமே மனுதாரருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக விருப்ப ஓய்வு வழங்க வில்லை என்பதை நீதிமன்றம் ஊக்குவிக்காது என தெரிவித்து, ஆசிரியர் ராஜூக்கு விருப்ப ஓய்வு வழங்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

இதையும் படிங்க: களங்கம் கற்பிப்போர் மீது கடும் நடவடிக்கை - நீதிபதி எச்சரிக்கை

ABOUT THE AUTHOR

...view details