தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

போக்குவரத்துக் கழகப் பணிகளை தனியாருக்கு வழங்க எதிர்ப்பு - தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்! - அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர்

போக்குவரத்துக் கழகப் பணிகளை தனியாருக்கு வழங்கக் கூடாது என வலியுறுத்தி, பல்லவன் இல்லம் முன்பு அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Condemn
Condemn

By

Published : Sep 14, 2022, 8:21 PM IST

சென்னை:போக்குவரத்துக் கழகப் பணிகளை தனியாருக்கு தாரை வார்க்கக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை பல்லவன் இல்லம் முன்பு, அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில், ஓட்டுநர், நடத்துநர், பாதுகாவலர் உள்ளிட்ட போக்குவரத்துக் கழகப் பணிகளை தனியாருக்கு தாரை வார்க்க கூடாது, அவுட் சோர்சிங் ஆள்சேர்ப்பு முறையை கைவிட வேண்டும், போக்குவரத்துக் கழகத்தில் காலியாக உள்ள 3,000 காலிப்பணியிடங்களை நிரந்தர தொழிலாளர்களைக் கொண்டு நிரப்ப வேண்டும், ஊழியர்களுக்கு பண்டிகை கால விடுமுறைக்கான சம்பளத்தை வழங்க வேண்டும், வார விடுப்பை ரத்து செய்யக்கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் சார்பில், 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: மின் கட்டண உயர்வு - திரும்பப்பெற வலியுறுத்தி வரும் 23இல் ஆர்ப்பாட்டம்; அறிவித்த கிருஷ்ணசாமி

ABOUT THE AUTHOR

...view details