தமிழ்நாடு

tamil nadu

கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவருக்கு பாதிப்பா? - மருத்துவர்கள் விளக்கம்!

By

Published : Jan 24, 2021, 5:19 PM IST

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கரோனா தடுப்பு ஊசி போட்டுக்கொண்ட முன் களப்பணியாளர் மீனாவிற்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியான நிலையில், அவர் நன்றாக இருக்கிறார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னை
சென்னை

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் பணியாற்றும் முன்களப் பணியாளர் மீனா (25) ஜனவரி 19ஆம் தேதி கோவாக்ஸின் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். அதன் பின்னர் கண்காணிப்பு முடித்துவிட்டு வீட்டிற்குச் சென்றுள்ளார். பின்னர் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்படவே ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். மருத்துவர்கள் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுகுறித்த தகவல் வெளியானதைத் தொடர்ந்து மருத்துவக்கல்வி இயக்குநர் நாராயணபாபு, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி முதல்வர் பாலாஜி ஆகியோர் நேரில் சென்று மீனாவின் உடல்நிலைக் குறித்து கேட்டு அறிந்தனர்.

முன்களப் பணியாளர் மீனாவிடம் நலம் விசாரிக்கும் மருத்துவர்கள்

இதுகுறித்து மருத்துவர்கள் கூறும்போது, தடுப்பூசி போட்டதால் அவருக்கு பாதிப்பு ஏற்படவில்லை, தடுப்பூசி போட்டதால் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளார். மருத்துவத்துறையினர் பல்வேறு பரிசோதனைகளையும் செய்தனர். இதன் மூலம் பாதிப்புகள் எதுவும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. அவர் விரைவில் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவார் என தெரிவித்தனர்.

நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் திட்டம் ஜனவரி 16ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. முதற்கட்டமாக சுய விருப்பதின்பேரில் முன்பதிவு செய்துள்ள சுகாதாரத்துறை பணியாளர்களுக்கும், அடுத்த கட்டமாக முன்களப் பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க:கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளும் அமைச்சர் விஜயபாஸ்கர்!

ABOUT THE AUTHOR

...view details