தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் கணினி முதுகலை ஆசிரியர்கள் 814 பேரை தேர்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் மார்ச் 20ஆம் தேதி முதல் ஏப்ரல் 10ஆம் தேதி வரையில் ஆன்லைன் மூலம் பெறப்பட்டது. இதற்காக 20,690 பேர் விண்ணப்பம் செய்தனர். மக்களவைத் தேர்தல் நடைபெறுவதால் தேர்வு நடைபெறும் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது.
கணினி ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு அறிவிப்பு - சென்னை
சென்னை: அரசுப் பள்ளி கணினி ஆசிரியர்களுக்கான தேர்வு தேதியை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
தேர்வு
இந்நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "2018-2019 ஆண்டுக்கான கணினி பயிற்றுநர் நேரடி நியமனத்திற்கான அறிவிப்பு ஆசிரியர் தேர்வு வாரியத்தினால் மார்ச் 1ஆம் தேதி வெளியிடப்பட்டது. இணையவழித் தேர்வு (ஆன்லைன்) ஜுன் 23ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதன்முறையாக ஆன்லைன் மூலம் 150 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.