தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முதுகலை கணினி ஆசிரியர் பணி - தேர்ச்சி பட்டியல் வெளியீடு - www.trb.tn.nic.in

சென்னை: முதுகலை கணினி ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள நபர்களின் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

கணினி ஆசிரியர் பணி
computer teacher result

By

Published : Jan 12, 2020, 11:26 AM IST

முதுகலை கணினி ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 697 நபர்களின் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் தலைவர் லதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஆசிரியர் தேர்வு வாரியத்தால் முதுகலை கம்ப்யூட்டர் ஆசிரியர் பணிக்கு ஆன்லைன் மூலம் ஜூன் மாதம் 23, 27 ஆகிய தேதிகளில் தேர்வு நடத்தப்பட்டது.

இந்த தேர்வின் முடிவுகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் நவம்பர் 28ஆம் தேதி வெளியிடப்பட்டது. சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்ட தேர்வர்கள் உரிய சான்றிதழ்கள், பிற விபரங்களை டிசம்பர் 2ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்திட கால அவகாசம் வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து தேவையான கல்வித் தகுதி பெறாதவர்கள், சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யாதவர்கள், தகுதியற்றவர்கள் என கண்டறியப் பட்டவர்கள் தவிர மீதம் உள்ளவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு ஜனவரி 8, 9, 10 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெற்றது. அதன் அடிப்படையில் தற்பொழுது தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டவர்களில் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் ஆசிரியர் தேர்வு வாரியம், தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் 697 பேர் பணி நியமனத்திற்கு செய்யப்பட்டுள்ளனர். முதல் இரண்டு இடங்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருந்து 106.93 மதிப்பெண்கள் பெற்ற ரேவதி, யமுனா ஆகியோர் பெற்றுள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையும் படிங்க: எப்போதும் முதலிடத்தில் பொன்னியின் செல்வன்!

ABOUT THE AUTHOR

...view details