தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இன்று முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு! - TN full lockdown

தமிழ்நாட்டில் இன்று முதல் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது. அத்தியாவசியத் தேவையின்றி வெளியே சுற்றுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, காவல் துறை எச்சரித்துள்ளது.

complete lockdown
முழு ஊரடங்கு

By

Published : May 24, 2021, 7:20 AM IST

தமிழ்நாட்டில் கரோனா தொற்றின் 2ஆவது அலை அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டாலும், அறிவிக்கப்பட்ட ஒரு சில தளர்வுகளை பொதுமக்கள் பயன்படுத்தி சுற்றி வந்தனர். இதன் காரணமாக, கரோனா தொற்றின் பரவல் மேலும் அதிகரித்தது.

கரோனா பரவல் மேலும் அதிகரிப்பதைக் கட்டுப்படுத்தத் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு இன்று (மே.24) முதல் 31ஆம் தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது.

எதற்கெல்லாம் அனுமதி?

  • பால், குடிநீர், தினசரி பத்திரிகை விநியோகத்திற்கும், மருந்தகம், நாட்டு மருந்துக் கடை இயங்கவும் அனுமதி
  • உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து வாகனங்கள் மூலம் மட்டுமே காய்கறிகள், பழங்கள் விற்பனை
  • உணவகங்களில் பார்சல் சேவைக்கு காலை 6 மணி முதல் 10 மணி வரையும், பிற்பகல் 12 மணி முதல் 3 மணி வரையும்ஸ இரவு 6 மணி முதல் 9 மணி வரையும் மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
  • தனியார் நிறுவனங்கள், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்களின் ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற வேண்டும்
  • மின்னணு சேவை நிறுவனங்கள் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்கலாம்
  • தலைமைச் செயலகத்திலும், மாவட்டங்களிலும் அத்தியாவசியத் துறைகள் மட்டும் இயங்கும்
  • மருத்துவக் காரணங்களுக்காக, மாவட்டத்திற்குள் பயணிக்க இ-பதிவு தேவையில்லை
  • மருத்துவக் காரணங்கள், இறப்புகளுக்காக மட்டுமே, மாவட்டம் விட்டு, மாவட்டம் செல்ல இ-பதிவுகள் அனுமதிக்கப்படும்
  • அத்தியாவசியப் பொருள்கள், மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் வழிகாட்டு நெறிமுறைகளின்படி செயல்பட அனுமதி

அடுத்த ஒரு வாரக் காலத்திற்கு ஊரடங்கைத் தீவிரமாகச் செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் வீட்டிலேயே இருந்து, முழு ஊரடங்கிற்கு ஒத்துழைப்பு அளிக்கும்படி, தமிழ்நாடு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

அத்தியாவசியத் தேவையின்றி வெளியே சுற்றுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை எச்சரித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details