தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'தபால் வாக்குகள் எண்ணிக்கையில் குழப்பமான சூழல் நிலவுகிறது' திமுக புகார்!

சென்னை: தபால் வாக்குகள் எண்ணிக்கை குறித்து குழப்பமான சூழ்நிலை நிலவுவதாகத் தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாஹூவிடம் திமுக புகார் அளித்துள்ளது.

DMK complained to Chief Electoral Officer that there is confusion over the number of postal votes
DMK complained to Chief Electoral Officer that there is confusion over the number of postal votes

By

Published : Apr 28, 2021, 4:58 PM IST

சென்னை தலைமைச் செயலகத்தில், தபால் வாக்குகள் எண்ணிக்கை குறித்து குழப்பமான சூழ்நிலை நிலவுவதாக, தலைமை தேர்தல் அலுவலருக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடிதம் எழுதியிருக்கிறார்.

அந்த கடிதத்தை திமுக சார்பில் திமுக வழக்கறிஞர் பச்சையப்பன் நேரில் வழங்கினார். பின்னர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், " தபால் வாக்குகள் குறித்து பல்வேறு குழப்பங்கள் நிலவி வருவதால், அதற்கு ஒரு தெளிவான வழிகாட்டுதலை அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலரிடமும் தேர்தல் ஆணையம் வழங்க வேண்டும்.

அதேபோல அரசியல் கட்சி பிரமுகர்களுக்கும், அந்த வழிகாட்டு நெறிமுறைகளை தேர்தல் ஆணையம் வழங்க வேண்டும். எப்போதுமிருக்கும் தேர்தல் நடத்தை முறைகளின்படி, முதலில் தபால் வாக்குகளே எண்ணப்பட வேண்டும்.

தபால் வாக்குகள் குறித்து எந்த ஒரு தன்னிச்சையான முடிவையும் தேர்தல் நடத்தும் அலுவலர் எடுக்கக் கூடாது. ஒரு மேஜைக்கு 500 தபால் வாக்குகள் மட்டுமே எண்ணப்பட வேண்டும்" என்று திமுக சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details