சென்னை:பன்னாட்டு பெண்கள் அமைப்பின் நிறுவனர் செங்கோடி பாலகிருட்டிணன், சின்னத்திரை நடிகைக்கு நடந்த சித்தரவதை குறித்து அந்த நடிகை சார்பில் டிஜிபி அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதன் பின்னர், செய்தியாளரைச் சந்தித்த அவர், “சின்னத்திரை துணை நடிகைக்கு ஏற்கனவே திருமணமாகி மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றுள்ள நிலையில் இவருக்கும் இயக்குநர் ராஜாதேசிங்கு சுப்பிரமணிக்கும் இடையே நல்ல பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில் ஒரு நாள் இயக்குநர் ராஜதேசிங்கு சினிமாவில் ஒத்துழைத்தால் மட்டுமே நல்ல நிலைமைக்கு வரமுடியும் என நடிகையிடம் தெரிவித்ததுடன் தன்னுடன் இணைந்து தயாரிப்பாளராக செயல்படுமாறு கேட்டுள்ளார்.
இதனை நம்பிய நடிகை, ராஜாதேசிங்கு மணியிடம் ரூ.5 லட்சம் கொடுத்ததாகவும், அந்த பணத்தில் இளமை இதோ இதோ படத்தை தொடங்கியதாகவும் நாளடைவில் நடிகையை காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி இயக்குநர் கோயிலுக்கு அழைத்துச் சென்று தாலி கட்டி இருவரும் கணவன், மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர்.