இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகார் மனுவில்,
திருமாவளவன் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்! - thirumavalavan
சென்னை : இந்து மதத்தை பற்றி இழிவாக பேசியதாக, விசிக தலைவர் திருமாவளவன் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் இந்து மக்கள் முன்னணி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திருமாவளவன் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்
"கடந்த 18ஆம் தேதி அசோக் நகரில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அலுவலகத்தில் திருமாவளவன் தலைமையில் முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்த்தி நடைபெற்றது. அப்போது, காந்தியை இந்து தீவிரவாதி என்றும், கோட்சேவை இந்து பயங்கரவாதி என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் குறிப்பிட்டார். எனவே, இந்து மதத்தை விமர்சனம் செய்த திருமாவளவன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்", என குறிப்பிட்டுள்ளது.