சென்னை:ஆதிக்க சமூகத்தினருக்குச் சார்பாக எடுக்கப்பட்ட திரைப்படம் என விமர்சிக்கப்பட்ட "திரௌபதி" திரைப்படத்தின் மூலம் பலரது கவனத்தையும் பெற்றவர், இயக்குநர் மோகன் ஜி. இவர் தற்போது அதே பெரும்பாலான படக்குழுவினருடன் 'ருத்ர தாண்டவம்'எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி 'ருத்ர தாண்டவம்' திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி, பல்வேறு தரப்பிலும் விமர்சிக்கப்பட்டது.
மதக்கலவரங்கள் வெடிக்க வாய்ப்பு
இந்நிலையில் காவல் துறைத் தலைவர் அலுவலகத்தில் சிறுபான்மை மக்கள் நலக் கட்சி சார்பில், "ருத்ர தாண்டவம்" திரைப்படத்தை தடை செய்யக்கோரி இன்று (செப்.1) புகார் அளிக்கப்பட்டது. அதன் பின்னர் சிறுபான்மை மக்கள் நலக் கட்சி தேசியத் தலைவர் சாம் ஏசுதாஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், 'கிறிஸ்தவர்கள் மதம் மாற்றுகிறார்கள் எனக்கூறி, உண்மைக்குப் புறம்பான கருத்துகளை "ருத்ர தாண்டவம்" திரைப்படம் மூலம் மக்கள் மனதில் பதியவைக்க இயக்குநர் மோகன் ஜி முயற்சிக்கிறார்.