காட்பாடியை அடுத்த சேர்க்காடு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் டெல்லியில் உள்ள தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை அமைச்சரும், திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன் மீது சாதிய வன்கொடுமை மற்றும் நில அபகரிப்பில் ஈடுபட்டதாக புகார் அளித்துள்ளார்.
அந்தப் புகார் மனுவில், ”வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேர்க்காடு பகுதியில் வசிக்கும் பட்டியலின மக்களிடம் துரைமுருகனின் உறவினர்களும், திமுக கட்சியினரும் சாதி ரீதியான வன்கொடுமையில் ஈடுப்படுகின்றனர். தன்னையும், தனது சகோதரரையும் துரைமுருகனின் தூண்டுதலின்பேரில் அவரது உறவினர்கள் முருகன் மற்றும் பெருமாள், அவர்களது தந்தை கிருஷ்ணன் ஆகியோர் தாக்கி நில அபகரிப்பில் ஈடுப்பட்டனர்.