பெண்கள், குழந்தைகள் குறித்து ஆபாசமாகப் பேசி, பப்ஜி விளையாட்டைத் தனது யூ-ட்யூபில் வெளியிட்டு வந்ததற்காக பப்ஜி மதன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
தர்மபுரியில் மதிகோன்பாளையம் பகுதியில் பதுங்கியிருந்த அவரை, தனிப்படையினர் கைதுசெய்து நேற்று சென்னை அழைத்துவந்தனர். அவரது மனைவி கிருத்திகா, மதனின் யூ-ட்யூப் பக்கத்திற்கு நிர்வாகியாக இருந்த காரணத்திற்காக, ஏற்கெனவே கைதுசெய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில், சென்னைக்கு அழைத்துவரப்பட்ட மதனிடம், விடிய விடிய மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்.
20 மணி நேர பப்ஜி விளையாட்டு
விசாரணையில், அவர் தினமும் 20 மணி நேரம் பப்ஜி விளையாடியது தெரியவந்தது. இதுமட்டுமின்றி, பல பேரிடம் கூகுள்-பே மூலமாகப் பணம் பெற்றுள்ளதும் தெரியவந்துள்ளது.
5 ஆயிரம் ரூபாய்க்கும் புகாரளிக்கலாம்