தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இலங்கை செல்ல விசாவுக்கு விண்ணப்பித்த பெண்ணிடம் கடுமையாக நடந்துகொண்ட குடியுரிமை அதிகாரிகள்.. - Embassy officials treated woman who applied for visa to go Sri Lanka

இலங்கை செல்வதற்கு விசாவுக்கு விண்ணப்பித்த பெண்ணிடம் குடியுரிமை அதிகாரிகள் கடுமையாக நடந்து கொண்டதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இலங்கை செல்ல விசாக்கு விண்ணப்பித்த பெண்ணிடம்  கடுமையாக நடந்துகொண்ட குடியுரிமை அதிகாரிகள்..
இலங்கை செல்ல விசாக்கு விண்ணப்பித்த பெண்ணிடம் கடுமையாக நடந்துகொண்ட குடியுரிமை அதிகாரிகள்..

By

Published : Jun 24, 2022, 8:30 AM IST

சென்னைஆலப்பாக்கம் சங்கரப்பா 14வது தெருவை சேர்ந்தவர் தீபிகா(31). இலங்கை நாட்டை சேர்ந்த தீபிகா கடந்த 1980 ஆம் ஆண்டு முதல் சென்னையிலேயே குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் தீபிகா இலங்கை செல்வதற்காக விசாவுக்காக விண்ணப்பித்துள்ளார். இதற்கான விசாரணை நேற்று (ஜூன்.23) நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள சாஸ்திரி பவனில் உள்ள குடியுரிமை அலுவலகத்தில் நடைபெற்றது.

அப்போது தீபிகாவிடம் விசாரணை செய்த குடியுரிமை அதிகாரிகள், இரண்டு வருடத்திற்கு முன்பு தாய் செல்வராணி இலங்கைக்கு சென்ற போது ஏன் செல்லவில்லை என கேள்வி கேட்டதாகவும், அதற்கு பணமில்லை என தீபிகா கூறியதற்கு இப்போது எப்படி பணம் வந்தது என கடுமையாக நடந்து கொண்டதால் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் கோபமடைந்த தீபிகா தன்னிடம் கடுமையாக நடந்துகொண்ட குடியுரிமை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - முதியவருக்கு 81 ஆண்டு சிறை தண்டனை

ABOUT THE AUTHOR

...view details