தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’பொய்யான செய்தி பரப்பும் மன்சூர் அலிகான்’ - பிரதமர் மக்கள் நலத் திட்டங்கள் பிரச்சார விளம்பர அமைப்பினர் புகார் - மன்சூர் அலிகான் மீது புகார்

”கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதால்தான் நடிகர் விவேக்கின் உடல் நலன் பாதிக்கப்பட்டதாக பொய்யான செய்தியைப் பரப்பி வரும் நடிகர் மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

’பொய்யான செய்தி பரப்பும் மன்சூர் அலிகான்’ - பிரதமர் மக்கள் நலத் திட்டங்கள் பிரச்சார விளம்பர அமைப்பினர் புகார்
மன்சூர் அலிகான்

By

Published : Apr 17, 2021, 5:51 PM IST

Updated : Apr 17, 2021, 6:24 PM IST

நடிகர் விவேக், நேற்று (ஏப்.16) திடீரென உடல்நலக் குறைவு காரணமாக வடபழனியில் உள்ள சிம்ஸ் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மாரடைப்பு காரணமாக நடிகர் விவேக் அனுமதிக்கப்பட்டதாகவும், அவரது உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும் மருத்துவமனை தரப்பில் நேற்றே தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து இன்று (ஏப்.17) விடியற்காலை சிகிச்சைப் பலனின்றி விவேக் உயிரிழந்தார்.

முகக்கவசம் அணிய வேண்டாம் எனக் கூறிய மன்சூர் அலிகான்

இதனிடையே நடிகர் மன்சூர் அலிகான் நேற்றைய செய்தியாளர்கள் சந்திப்பின்போது கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதால்தான் நடிகர் விவேக்கிற்கு உடல் நிலை சரியில்லாமல் போனதாகவும், யாரும் முகக்கவசம் அணிய வேண்டாம் எனவும் தெரிவித்தார். மேலும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் கொன்றதாகவும் அவர் கருத்துகளைத் தெரிவித்தார்.

’பொய்யான செய்தி பரப்பும் மன்சூர் அலிகான்’ - பிரதமர் மக்கள் நலத் திட்டங்கள் பிரச்சார விளம்பர அமைப்பினர் புகார்

இந்நிலையில் நடிகர் விவேக் மரணம் குறித்து அவதூறு கருத்துகளை பரப்பிவரும் நடிகர் மன்சூர் அலிகான்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி, பாரதப் பிரதமர் மக்கள் நலத் திட்டங்கள் பிரச்சார விளம்பர அமைப்பினர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

’பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்துகிறார்’

தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய அந்த அமைப்பின் செயலர் ராஜசேகரன், ”கரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதால் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிற நிலையில், முகக்கவசம் அணிய வேண்டாம் என நடிகர் மன்சூர் அலிகான் கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது.

மன்சூர் அலிகான்

கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதால்தான் நடிகர் விவேக்கின் உடல்நிலை பாதிக்கப்பட்டதாக அரசுக்கு எதிராக பொய்யான கருத்துகளை பரப்பி, பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தும் வகையில் அவர் பேசி வருகிறார். தொடர்ந்து அரசுக்கு எதிரான கருத்துகளை மன்சூர் அலிகான் பரப்பி வருவதால் தீவிரவாத அமைப்புகளுடன் அவருக்கு தொடர்பு இருக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

பிரதமர் மக்கள் நல திட்டங்கள் பிரச்சார விளம்பர அமைப்பினர் புகார்

எனவே உடனடியாக நடிகர் மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நாங்கள் உதவி ஆணையரிடம் புகார் அளித்துள்ளோம்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:விதைக்கப்பட்டார் ஜனங்களின் கலைஞன்!

Last Updated : Apr 17, 2021, 6:24 PM IST

ABOUT THE AUTHOR

...view details