தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பிரபல சீரியல் இயக்குநர் மீது பரபரப்பு புகார் - Baakiyalakshmi tv serial

'பாக்கியலட்சுமி' சீரியல் இயக்குநர் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில், சமூக ஆர்வலர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

பிரபல சீரியல் இயக்குநர்
பிரபல சீரியல் இயக்குநர்

By

Published : Dec 30, 2021, 10:53 AM IST

சென்னை: பட்டாபிராம் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலரான முகமது கவுஸ் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில், "சில மாதங்களாக தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'பாக்கியலட்சுமி' என்ற சீரியலில் ஆசிரியரின் பாலியல் துன்புறுத்தல் காரணமாக மாணவி தற்கொலை செய்து கொள்வது போன்ற காட்சிகள் வருகிறது.

தமிழ்நாடு அரசு குழந்தைகள், பெண்களுக்கு ஏற்படும் வன்கொடுமை புகார்களை உடனடியாக தெரிவிக்க தொலைபேசி எண்களை வழங்கி வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில், தொலைக்காட்சியில் இதுபோன்று காட்சிகள் வருவது கண்டனத்துக்குரியது.

இதுபோன்ற காட்சிகள் மற்ற மாணவிகளையும் தற்கொலைக்கு தூண்டும் வகையில் அமைந்துள்ளதால் அவற்றை உடனடியாக நீக்கி சீரியலின் இயக்குநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:'கட்டில்' திரைப்பட மேக்கிங் வீடியோ வெளியீடு!

ABOUT THE AUTHOR

...view details