கடந்த 16ஆம் தேதி காஞ்சிபுரத்தில் உள்ள அத்திவரதர் கோயிலுக்கு செய்தி சேகரிக்க சென்ற தனியார் தொலைக்காட்சி பத்திரிகையாளர் ராஜேஷ் மற்றும் சந்திரசேகர் ஆகியோரை ௭ஸ்.பி. வருண் குமார் மற்றும் அங்கிருந்த காவலர்கள் சரமாரியாக தாக்கினர்.
பத்திரிகையாளரைத் தாக்கிய எஸ்.பி. மீது புகார்! - காஞ்சிபுரம் பத்திரிக்கையாளர் மீது தாக்குதல்
சென்னை: காஞ்சிபுரத்தில் பத்திரிகையாளரைத் தாக்கிய எஸ்.பி.வருண்குமார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பத்திரிகையாளர் மன்றத்தின் சார்பாக காவல்துறை இயக்குநரிடம் புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் பத்திரிகையாளர்கள் ராஜேஷ், சந்திரசேகரைத் தாக்கிய எஸ்.பி.வருண்குமார் உள்ளிட்ட காவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பத்திரிகையாளர் மன்றத்தின் சார்பாக காவல்துறை இயக்குநரிடம் புகார் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பத்திரிகையாளர் மன்றச் செயலாளர் பாரதி தமிழன், 'இதுபோன்ற சம்பவங்கள் பத்திரிகையாளர்களுக்கும் காவல்துறையினருக்கும் உள்ள நல்லுறவை பாதிக்கக்கூடும் என்றும்; சம்மந்தப்பட்ட காவல் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளோம்' என்றும் தெரிவித்தார்.