பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்சன்ஸ் கத்தி, தர்பார், வந்தா ராஜாவா தான் வருவேன் போன்ற பல படங்களை தயாரித்ததுடன், பொன்னியின் செல்வன் பாகம் ஒன்று, இரண்டு மற்றும் இந்தியன் 2 உள்ளிட்ட படங்களையும் தயாரித்து வருகிறது. இந்நிலையில் லைகா புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் நீல்காந்த் நாராயண்கபூர் சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.
அதில் NPK narendramari என்ற பெயரில் கடந்த ஜூலை மாதம் மட்டும் 26-க்கும் மேற்பட்ட இமெயில்கள் அனுப்பி பணம் பறிக்கும் நோக்கில் செயல்படுவதாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரபலமான சினிமா தயாரிப்பு நிறுவனமான தங்களின் பெயரை கெடுக்கும் முயற்சியிலும், பணம் பறிக்கும் முயற்சியிலும், தங்களுக்கு தொடர்பு இல்லாத தகவல்களுடன் மெயில்கள் அனுப்பப்பட்டுள்ளன.