தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காவல் ஆய்வாளரால் உயிருக்கு ஆபத்து - நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் - மனைவியுடன் தவறான தொடர்பில் இருக்கும் காவல் மீது கணவன் புகார்

எனது மனைவியுடன் தவறான தொடர்பில் உள்ள திருக்கழுக்குன்றம் காவல் ஆய்வாளர் முனி சேகர் மீது உரிய நடவடிக்கை எடுத்து எனது உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என தமிழ்நாடு காவல்துறை தலைவரிடம் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

police inspector  complaint on police inspector  complaint against thirukkalukkunram police inspector  காவலர் மீது புகார்  மனைவியுடன் தவறான தொடர்பில் இருக்கும் காவல் மீது கணவன் புகார்  மனைவி மீது கணவன் புகார்
புகார்

By

Published : Oct 4, 2021, 12:19 AM IST

சென்னை:பழைய வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த அஷ்ரப் அன்சாரிக்கும்(38), செங்கல்பட்டு மாவட்டம் நெல்வாய் கிராமம் பகுதியைச் சேர்ந்த தஹாகரத்துன்னிஷா என்பவருக்கும் கடந்த 2012 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.

அவர்களது குடும்ப வாழ்க்கை நிம்மதியான முறையில் சென்றிருந்த நிலையில், அஷ்ரப் அன்சாரியின் மனைவி தஹாகரத்துன்னிஷா, திருக்கழுக்குன்றம் அருகே உள்ள அவரது அக்கா வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அவரின் அக்கா வீட்டிற்கு சென்று வரும்போதெல்லாம் நீண்ட நேரமாக செல்போனில் பேசிக்கொண்டிருப்பதால், இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளன.

இதையடுத்து கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பாக தஹாகரத்துன்னிஷா செல்போனை, அவரின் கணவர் எடுத்து பரிசோதித்துள்ளார். அப்போது திருக்கழுக்குன்றம் காவல் ஆய்வாளர் முனி சேகர் உடன் தஹாகரத்துன்னிஷா தவறான தொடர்பில் இருந்தது தெரியவந்தது.

மேலும் வாட்ஸ்அப் காலில் காவல் ஆய்வாளர் நிர்வாண நிலையில் தஹாகரத்துன்னிஷாயுடன் பேசிய புகைப்படங்களை கண்டு அஷ்ரப் அன்சாரி அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனால் இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக தஹாகரத்துன்னிஷா இரண்டு குழந்தைகளை அழைத்துக்கொண்டு நெல்வாய் கிராமத்தில் உள்ள அவரது அக்கா வீட்டிற்கு சென்றுள்ளார்.

இது தொடர்பாக அஷ்ரப் அன்சாரி திருக்கழுக்குன்றம் காவல் ஆய்வாளர் முனி சேகரை கைபேசியில் பலமுறை தொடர்பு கொண்டும், சரியாக பதிலளிக்கவில்லை என கூறப்படுகிறது.

இது குறித்து அஷ்ரப் அன்சாரி தமிழ்நாடு காவல் துறை தலைவரிடம் புகார் அளித்துள்ளார். அதில், “ஆய்வாளர் முனி சேகர் எனது உயிருக்கும் உடமைக்கும் அச்சுறுத்தல் கொடுத்துவருகிறார். இதனால் என் உயிருக்கும் என் குடும்பத்தாருக்கும் ஏதாவது ஆபத்து நிகழ்ந்தால் அதற்கு முழுப்பொறுப்பும் திருக்கழுக்குன்றம் காவல் ஆய்வாளர் முனி சேகர், எனது மனைவி தஹாகரத்துன்னிஷா, அவரின் சகோதரிகள் சதாஹத் பீ, சான்பீ மற்றும் அவர்களின் கணவர் பாஷா ஆகியோர் தான் பொறுப்பு.

எனவே எனது மனைவி தஹாகரத்துன்னிஷாவுடன் தவறான தொடர்பு கொண்டுள்ள திருக்கழுக்குன்றம் காவல் ஆய்வாளர் மீது உரிய நடவடிக்கை எடுத்து என் உயிருக்கும் உடமைக்கும் தகுந்த பாதுகாப்பு அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்” என குறிப்பிட்டிருந்தது.

இதையும் படிங்க: கப்பலில் உல்லாச போதை விருந்து - ஷாருக்கான் மகன் உள்பட 13 பேர் கைது!

ABOUT THE AUTHOR

...view details