தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மழலை பள்ளியில் கீழே விழுந்து அழுத சிறுமியை கண்டுகொள்ளாத ஆசிரியை மீது புகார் - teacher

மழலை பள்ளியில் கீழே விழுந்து அழுத சிறுமியை கண்டுகொள்ளாத ஆசிரியை மீது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

மழலை பள்ளியில் கீழே விழுந்த அழுத சிறுமியை கண்டுகொள்ளாத ஆசிரியை மீது புகார்
மழலை பள்ளியில் கீழே விழுந்த அழுத சிறுமியை கண்டுகொள்ளாத ஆசிரியை மீது புகார்

By

Published : Aug 11, 2022, 9:28 PM IST

சென்னை: நெற்குன்றத்தில் ஆப்பிள் கிட்ஸ் என்ற பெயரில் தனியார் மழலை பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் படித்து வருகின்றனர். இந்த நிலையில் இப்பள்ளியில் படித்து வரக்கூடிய நெற்குன்றத்தை சேர்ந்த 3 வயது சிறுமி ஒருவரை அதே வகுப்பை சேர்ந்த சிறுமி ஒருவர் சேரில் இருந்து கீழே தள்ளி உள்ளார்.

கீழே விழுந்த சிறுமியை தூக்கிவிடாமல் ஆசிரியர் அலட்சிய போக்குடன் செயல்படும் பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமி வீட்டிற்கு வந்தவுடன் பள்ளியில் அடிப்பதாகவும், பள்ளிக்கு செல்லமாட்டேன் எனக்கூறி அழுவதாகவும் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

சிசிடிவி காட்சி

இது குறித்து சிறுமியின் பெற்றோர் மழலை பள்ளி நிர்வாகத்திடம் கேட்டப்போது அவர்கள் முறையாக பதிலளிக்கவில்லை என குற்றஞ்சாட்டி உள்ளனர். இந்நிலையில் சிறுமியின் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் இரண்டு நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக பெற்றோர் வேதனை தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் பெற்றோர் பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். பள்ளியில் சேரில் இருந்து தள்ளிவிடும் காட்சிகள் மற்றும் அதனை ஆசிரியர் கண்டுக்கொள்ளாமல் இருக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க:கனியாமூர் பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேரின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

ABOUT THE AUTHOR

...view details