சென்னை:தமிழ்நாடு புகைப்பட மற்றும் வீடியோ கலைஞர்கள் தொழிற்சங்கம் சார்பில் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளிக்கப்பட்டது. தொடர்ந்து, சங்கத்தின் மாநில தலைவரான வீடியோ ரமேஷ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தனியார் தொலைக்காட்சியில் இரவு 9.30 மணிக்கு ஒளிப்பரப்பாகும் சீரியல் ஒன்றில் 34ஆவது எபிசோடில் மணவறை காட்சி ஒன்று ஒளி்பரப்பானது.
அந்த காட்சியில் நடிகர் மாரிமுத்து, புகைப்பட கலைஞர்கள் மற்றும் வீடியோ கலைஞர்களை கொச்சைப்படுத்தும் விதமாக ஒருமையில் பேசியிருக்கிறார். இந்த காட்சி அனைத்து புகைப்பட மற்றும் வீடியோ கலைஞர்களின் மனதை புண்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.