சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞரான காசிராஜன், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், “மறைந்த முதலமைச்சர் முலாயம் சிங் யாதவுக்கு தமிழ்நாட்டில் பலரும் அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்வை குறிப்பிட்டதோடு மட்டுமல்லாமல், யாதவ சமுதாயத்தை இழிவுபடுத்தும் வகையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார்.
இதுதொடர்பாக சீமான் பேசிய வீடியோ, சமூக வலைதளத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.