தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’ராபிடோ’  செயலியை தடை செய்யக்கோரி காவல் ஆணையரிடம் புகார்! - ராபிடோ  செயலி

சென்னை: இருசக்கர வாகன வாடகை செயலியான ராபிடோவை தடை செய்யக்கோரி சுதந்திர வாடகை கார் ஓட்டுநர் சங்கம் சார்பாக காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது.

ராபிடோ

By

Published : Jul 26, 2019, 5:41 PM IST

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய வாடகை கார் ஓட்டுநர் சங்கம் நிர்வாகி, ”மோட்டார் வாகன சட்டத்தின்படி சொந்த வாகனத்தை வாடகை சேவைக்காக பயன்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனால் சென்னை, திருச்சி, கோவை, மதுரை ஆகிய நகரங்களில் சட்டவிரோதமாக செயல்பட்டுவரும் தடை செய்யப்பட்ட இருசக்கர செயலியான ராபிடோவை தடை செய்யவேண்டும்.

இதனால் போக்குவரத்து அமலாக்கப் பிரிவு அலுவலர்களின் நடவடிக்கையில் 200க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளன. மேலும் குறைந்த விலையில் இருசக்கர வாகன சேவை இயக்கப்படுவதால், கார் ஓட்டுநர்களுக்கும் அரசு பேருந்துகளில் பயணிக்கும் பொதுமக்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. எனவே ராபிடோ செயலியை கூகுள் ப்ளே -ஸ்டோரில் இருந்து நீக்கக்கோரி காவல் ஆணையரிடம் புகராளித்துள்ளோம்” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details