தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பிராங்க் வீடியோ வெளியிட்ட பிராங்க்ஸ்டர் ராகுல் மீது பரபரப்பு புகார் - பிராங்க்ஸ்டர் ராகுல்

பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ஆயுதங்களைக் கொண்டு பிராங்க் வீடியோ வெளியிட்ட பிராங்க்ஸ்டர் ராகுல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Jan 26, 2023, 8:55 PM IST

பிராங்க்ஸ்டர் ராகுல் மீது புகார்

சென்னை: ‘பிராங்க்ஸ்டர் ராகுல்’ என்ற யூடியூப் சேனல் மூலமாக ஆயிரக்கணக்கான பிராங்க் வீடியோக்களை வெளியிட்டு பிரபலமடைந்தவர், ராகுல். பிராங்க் வீடியோக்களால் பிரபலமடைந்த ராகுலுக்கு பட வாய்ப்புகளும் கிடைத்தது. சிவகுமாரின் சபதம், பேச்சுலர் உள்ளிட்டப் பல படங்களில் துணை நடிகராகவும் நடித்துள்ளார்.

இந்நிலையில், ராகுல் பிராங்க் செய்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், துணிக்கடை ஒன்றில் வரக்கூடிய வாடிக்கையாளர்களிடம் வீண் தகராறில் ஈடுபட்டு, அவர்களிடம் ரவுடியைப் போல அரிவாளை காட்டி மிரட்டும் வகையில் அமைந்துள்ளது.

இந்த பிராங்க் வீடியோ பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில், ஆயுதங்களை கொண்டு மிரட்டும் தொனியில் அமைந்துள்ளதாக ரோஹித் குமார் என்பவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். இதனைத்தொடர்ந்து ரோஹித் குமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், “பிராங்க்ஸ்டர் ராகுல் என்ற பெயரில் இயங்கி வரும் யூடியூப் சேனலில், ராகுல் என்பவர் முதியவர்களை அச்சுறுத்தும் வகையில் ஆயுதங்களைக் கொண்டு மிரட்டுகிறார். இதனால் அந்த முதியவருக்கு ஏதேனும் மாரடைப்பு ஏற்பட்டு உயிர் சேதம் ஏற்பட்டால் யார் பொறுப்பேற்பது” எனக் கேள்வி எழுப்பினார்.

மேலும், “வெறும் பாலோயர்கள் மற்றும் பணம் சம்பாதிப்பதற்காக மட்டுமே இது போன்ற செயலில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது. ஆயுதங்களைக் கொண்டு முதியவர்களை மிரட்டும் தொனியில் பிராங்க் வீடியோக்களை வெளியிட்ட ராகுல் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்று உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் பிராங்க் வீடியோக்களை வெளியிடும் யூடியூப் சேனலை தடை செய்து சம்மந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க:விதி வலியது - நெல்லையில் கொள்ளையடித்துவிட்டு திரும்பிய கும்பல் - விபத்தில் சிக்கியது!

ABOUT THE AUTHOR

...view details