இது தொடர்பாக செய்தியாளர்களிடம் தமிழ்நாடு ஏழை எளியோர் நடுத்தர மக்கள் சங்க தலைவர் லிங்க பெருமாள் கூறியதாவது,
"வேளச்சேரியில் கடைகளை இந்த நபருக்குதான் ஒப்பந்தத்திற்கு விட வேண்டும் என்று கிண்டி உதவி ஆணையர் சுப்பராயன் கடந்த மாதம் கூறினார். இதற்கு ஏதிர்ப்பு தெரிவித்தபோது இந்த விவகாரத்துக்கு பின்னால் ஆளுங்கட்சியின் எம்எல்ஏ இருக்கிறார். உங்கள் பாதுகாப்புக்கு எந்த உத்தரவாதமும் கிடையாது என்று நிர்பந்தப்படுத்தினார். இது சம்பந்தமாக உதவி ஆணையர் மற்றும் வேளச்சேரி ஆய்வாளர் மீது காவல் ஆணையரிடத்தில் புகார் தெரிவித்தோம்.
இதனை கிண்டி காவல் ஆய்வாளர் விசாரிக்குமாறு உத்தரவு வந்தது. ஆனால் இதனை நான்தான் விசாரிப்பேன் என்று உதவி ஆய்வாளர் கூறிவிட்டு புகார் அளித்தவர்கள் மீது வீண் பழி சுமத்தி கைது செய்ய முயற்சித்து வருகிறார். இது தொடர்பாக டிராஃபிக் ராமசாமி, காவல் ஆணையரிடம் பேசினார்.
உதவி ஆணையர் மீது தமிழ்நாடு ஏழை எளியோர் நடுத்தர மக்கள் சங்கத்தினர் புகார் அதன்பேரில் அவர்கள் மீது விசாரணை நடத்தவுள்ளதாக கூறினார்கள். ஆனால் தற்போது வரை உதவி ஆணையர் சுப்பராயன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே ஆணையரிடம் புகார் அளிக்க வந்துள்ளோம். ஆணையர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தலைமைச் செயலரை சந்தித்து புகார் அளிப்பதை தவிர வேறு வழியில்லை" என்றார்.