அவர் அளித்த புகாரில், ”கோட்டூர்புரம் கான்கார்டியா விண்டர்சன் குடியிருப்பு உள்ளது. அந்த குடியிருப்பில் நடிகர் விஷ்னு விஷால் தங்கியுள்ளார். இந்நிலையில் இன்று( ஜனவரி 23) அதிகாலையில் விஷ்ணு விஷால், அவரது நண்பர்கள் தங்கியிருக்கும் பிளாட்ஸ் 2ஏ, 2பி குடியிருப்பு ஆகியவற்றிலிருந்து சத்தமான இசை சத்தம் கேட்டது. இதைப் பற்றி விஷ்ணு விஷாலிடம் தெரிவிக்க நான் மாடிக்குச் சென்றேன். ஆனால் 2A மற்றும் 2B-ன் குடியிருப்பாளர்கள் கதவைத் திறக்கத் தவறிவிட்டனர்.
நேரம் செல்ல செல்ல இசையின் சத்தம் அதிகமானது. அதனால் செக்யூரிட்டியிடம் சொன்னேன். அவர்கள் அங்கு சென்றபோதும் இசையை நிறுத்தவில்லை இதனால் சில நிமிடங்களுக்குப் பிறகு, 100-க்கு அழைத்தேன். அப்போதுதான் மூன்றாவது மாடியில் வசிக்கும் ஒரு சக குடியிருப்பாளரும் இரண்டாவது மாடியிலிருந்து வரும் அந்த சத்தத்தால் பாதிக்கப்பட்டது என் கவனத்திற்கு வந்தது.
அவரும் 100-க்கு அழைத்திருந்த காரணத்தால் அங்கு 2 காவலர்கள் வந்தனர். அவர்களுடன் நானும் மாடிக்குச் சென்றேன். அப்போது குடித்திருந்த விஷ்ணு விஷாலிடமிருந்து தகாத வார்த்தைகள் வந்து விழுந்தன. முன்னாள் ஐ.பி.எஸ் அலுவலர் ரமேஷ் குட்வாலாவின் மகன் விஷ்ணு விஷால், காவல் துறையில் தனக்கு இருக்கும் செல்வாக்கை குறிக்கும் வகையில் பேசினார். காவல் துறையினர் முன்னிலையில் அவர் பயன்படுத்திய வார்த்தைகள், தான் என்ன செய்தாலும் சட்டம் எதுவும் செய்யாது என்ற நம்பிக்கையைக் காட்டுகிறது.