சென்னை: இந்து மகா சபா கட்சியின் துணைத் தலைவர் நந்தகுமார், தமிழ்ச் செல்வி, விக்கி உள்ளிட்டோர் தீபாவளி செலவுகளுக்கான சீட்டு, வீடு வாங்குதல், அரசு வேலை வாங்கித் தருவது உள்ளிட்டவற்றைக் கூறி சுமார் 1 கோடியே 20 லட்சம் ரூபாய் வரை பண மோசடியில் ஈடுபட்டு தலைமறைவானதாகக் கூறப்படுகிறது.
மோசடியானது கடந்த ஆண்டின் ஜனவரி தொடங்கி அக்டோபர் வரை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்டவர்கள் மதுரவாயல் காவல் நிலையத்தில் பலமுறை புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த 30-க்கும் மேற்பட்டோர் மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, சென்னை - வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்க வந்துள்ளனர்.
அப்போது மோசடியில் ஈடுபட்டவர்களின் புகைப்படங்கள் ஒட்டப்பட்ட பதாகைகளை கையில் ஏந்தி, முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.