தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தளபதி விஜய் குறித்து அவதூறு பரப்பிய நபர் மீது புகார்! - தளபதி விஜய

சென்னை: தளபதி விஜய் மக்கள் இயக்கம் குறித்தும், விஜய் குறித்தும் பொய்யான தகவல்களைப் பரப்பிய முன்னாள் மாநிலப் பொறுப்பாளர் ஜெயசீலன் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தளபதி விஜய் குறித்து அவதூறு பரப்பிய நபர் மீது புகார்
தளபதி விஜய் குறித்து அவதூறு பரப்பிய நபர் மீது புகார்

By

Published : Feb 12, 2021, 8:49 AM IST

சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த ஜெயசீலன் என்பவர் தளபதி விஜய் மக்கள் இயக்கத்திற்கு எதிராகச் செயல்பட்டதாக 2011ஆம் ஆண்டு மாநிலப் பொறுப்பாளர் பதவியிலிருந்தும், இயக்கத்திலிருந்தும் நீக்கப்பட்டார்.

இவர், சமீபத்தில் விஜய் மக்கள் இயக்கப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட புதுச்சேரியைச் சேர்ந்த புஸ்ஸி.என். ஆனந்த் என்பவர் மீது அவதூறு பரப்பிவருவதாக தளபதி விஜய் மக்கள் இயக்க மாவட்டத் தலைவர்கள் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர்கள் கூறியதாவது, “புஸ்ஸி.என். ஆனந்த் விஜய் நடித்த திரைப்படத்தின் டிக்கெட்டுகளை அதிக விலைக்கு விற்றதாக ஜெயசீலன் அவதூறு பரப்பிவருகிறார். நடிகர் விஜய் பணம் பெற்றுக்கொண்டு மாவட்டத் தலைவர்களை நியமிக்கிறார் என்றும் கூறியுள்ளார்.

இதுபோன்ற பொய்யான தகவல்களைப் பரப்பிவரும் ஜெயசீலன் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளோம்” எனத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: நான்கு இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சி - வெங்கட்பிரபு
!

ABOUT THE AUTHOR

...view details