சென்னை வடபழனியை சேர்ந்தவர் கோபிநாத். இவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
அதில், பாலியல் உணர்வுகளை தூண்டும் விதமாக 'இரண்டாம் குத்து' திரைப்படத்தின் டீஸர் உள்ளது. எனவே டீஸரை தடை செய்ய வேண்டும். இளைஞர்களின் வாழ்வை சீரழிக்கும் நோக்கோடு டீஸரை வெளியிட்ட ஃபைவ் ஸ்டார் ஆடியோ யூடியூப் சேனல் நிர்வாகி, தயாரிப்பாளர் ஹரிபாஸ்கரன், இயக்குநர் சந்தோஷ் குமார் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "ஆபாசமாக இருக்கும் 'இரண்டாம் குத்து' படத்தின் சுவரொட்டிகள் பள்ளி, கல்லூரி, பொதுமக்கள் கூடும் இடங்களில் ஒட்டப்பட்டுள்ளன. திரைப்பட தணிக்கைக் குழு இந்தப் படத்தை எப்படி அனுமதித்தது? தற்போது மாணவர்கள் இணையவழியில் கல்வி கற்பதால் இந்தப் படத்தின் டீசர் அவர்களை எளிதில் சென்றடைந்து அவர்களின் பாலியல் உணர்வுகளை தூண்டும்" என்று குற்றம்சாட்டினார்
இதையும் படிங்க... பள்ளிக்கு எதிரே 'இரண்டாம் குத்து' போஸ்டர் : ஆவேசமாகக் கிழித்த நபர்!