தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆம்னி பேருந்துகள் அதிகக் கட்டணம் வசூலித்தால் புகார் அளிக்கலாம்! - போக்குவரத்து ஆணையர்

சென்னை : ஆம்னி பேருந்துகளில் வழக்கத்திற்கு மாறாக அதிகக் கட்டணம் வசூல் செய்தால், புகார் செய்ய ஏதுவாக தமிழ்நாடு அரசின் கட்டணமில்லா தொலைபேசி சேவை எண் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு அரசு

By

Published : Nov 4, 2020, 11:42 PM IST

ஆம்னி பேருந்துகளில் வழக்கத்திற்கு மாறாக அதிகக் கட்டணம் வசூல் செய்வது மற்றும் பிற குற்றங்கள் தொடர்பான புகார்களைத் தெரிவிக்க தமிழ்நாடு அரசின் கட்டணமில்லா தொலைபேசி சேவையை ( Toll Free - 1800 425 6151 ) அணுகலாம் என்று கூடுதல் தலைமைச் செயலர் மற்றும் போக்குவரத்து ஆணையர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு 11.11.2020 முதல் 18.11.2020 வரை இயக்கப்பட உள்ள ஆம்னி பேருந்துகளில் வழக்கத்திற்கு புறம்பாக அதிகக் கட்டணம் வசூல் செய்வது மற்றும் பிற குற்றங்கள் தொடர்பான புகார்களைத் தெரிவிக்க தமிழ்நாடு அரசின் கட்டணமில்லா தொலைபேசி சேவை ( Toll Free - 1800 425 6151 ) மூலம் புகார் தெரிவிக்கலாம்.

மேலும், போக்குவரத்துத் துறையின் மூலம் தமிழ்நாடு முழுவதும் இயங்கும் ஆம்னி பேருந்துகளில் மோட்டார் வாகனச் சட்டம் மற்றும் விதிகளுக்கு புறம்பாக இயங்கும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்க சரக அளவில் பல்வேறு குழுக்கள் இணைப் போக்குவரத்து ஆணையர், துணைப் போக்குவரத்து ஆணையர் தலைமையில், வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சிறப்பு செயலாக்கப் பிரிவின் ( Special Flying Squad ) மூலம் சிறப்பு தணிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளது .

இதன்மூலம் பொதுமக்கள் சிரமமின்றியும் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளும் வகையில் போக்குவரத்துத் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது”.எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details