தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மீரா மிதுன் மீது குவியும் புகார்கள்

பட்டியலின மக்களை இழிவாக பேசிய மீரா மிதுன் மீது புரட்சி பாரதம் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மீரா மிதுன்
மீரா மிதுன்

By

Published : Aug 8, 2021, 11:38 AM IST

சென்னை: நடிகை மீரா மிதுன் தானா சேர்ந்த கூட்டம், போதை ஏறி புத்தி மாறி, 8 தோட்டாக்கள் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீபகாலமாக இவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசி வீடியோ வெளியிட்டு வருகிறார்.

இந்தநிலையில் அவர், சில தினங்களுக்கு முன் வெளியிட்ட வீடியோ ஒன்றில், பட்டியலின இயக்குநர்கள், நடிகர், நடிகைகளை இழிவுபடுத்தும் விதமாகப் பேசி உள்ளார். .

இது சமூக வலைத்தளங்களில், பரவலாகப் பகிரப்பட்டு, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தப்பதிவிற்கு பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்கள் கிளம்பிய நிலையில், புரட்சி பாரதம் கட்சி சார்பில், மீரா மிதுன் மீது சென்னை, திருவள்ளூர், மதுரை ஆகிய 3 மாவட்ட காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மதுரையில் திராவிட விடுதலை கழகம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பு சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில், மீரா மிதுன் மீது சாதிய வன்கொடுமைப் பிரிவின் கீழும், சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புதல், ஐடி பிரிவின் கீழும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:எல்லைமீறும் மீரா மிதுன் - தொடரும் சாதிய வன்மம்!

ABOUT THE AUTHOR

...view details