தாம்பரம் உள்ளாடை திருடன்: கிழக்குத் தாம்பரம் இரும்புலியூரில் பகுதிகளில் கடந்த சில தினங்களாக, நள்ளிரவு நேரத்தில் மர்ம ஆசாமி ஒருவன் வீடுகளில் தனியாக இருக்கும் பெண்களிடம் அத்துமீறலில் ஈடுபடுவதும், அவர்களின் உள்ளாடைகளைத் திருடிச் செல்வதுமான சம்பவத்தில் ஈடுபட்டு இருந்தான்.
இது குறித்து சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். முன்னதாக பெண்களின் உள்ளாடைகளை மர்ம ஆசாமி திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகளுடன் செய்தி ஒளிபரப்பானது.
இந்நிலையில், நேற்று (நவ.7) அதிகாலை அந்த மர்ம ஆசாமி, மீண்டும் பொது மக்களின் வீட்டுக்குள் சென்று பாலியல் தொந்தரவு செய்ய முயன்றபோது, பொதுமக்களிடம் அவனைப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் சேலையூர் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டதில், அந்த நபர் தஞ்சாவூர் ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்த தமிழ் பிரபு (26) என்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் அந்த நபரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிசிடிவியில் சிக்கிய செருப்பு திருடன்: பல்லாவரம் அடுத்த சிட்லபாக்கம் நேரு நகர் பகுதியில், தனியார் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் இளைஞர் ஒருவர், வீட்டில் வெளியே இருந்த காலணி ஸ்டாண்டில் விடப்பட்டு இருந்த காலணிகளை மொத்தமாக ஒரு மூட்டையில் சுருட்டிக் கொண்டு எடுத்துச் செல்லும் சிசிடிவி கட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.