தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை மாநகராட்சியைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

சென்னை: கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தத் தவறியதாக சென்னை மாநகராட்சியைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டம்

By

Published : Jun 2, 2020, 7:06 PM IST

சென்னை மாநகராட்சியின் ஐந்தாவது மண்டல அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாதர் சங்க மாநில செயலாளர் வாசுகி, கட்சியின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கரோனா பரவலைத் தடுப்பதற்கு மாநகராட்சி நிர்வாகம் தவறிவிட்டதாக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநில மாதர் சங்க செயலாளர் வாசுகி, “ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள சென்னையில் உள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு உடனடியாக நிவாரண தொகை வழங்க வேண்டும். நோய்த் தடுப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள மருத்துவர், செவிலியர், தூய்மைப் பணியாளர் உள்ளிட்ட களப்பணியாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதிப்படுத்த வேண்டும்.

கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் உயிரிழந்தால் ரூபாய் 50 லட்சம் நிதி மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம்” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details