சென்னை:இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினரும் முன்னணி தலைவருமான மூ. வீரபாண்டியன் சென்னை வியாசர்பாடி முல்லை நகரில் வசித்து வருகிறார். இந்த நிலையில் இன்று (செப். 04) மாலை மூ.வீரபாண்டியன் திருமண நிகழ்வில் கலந்து கொள்வதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.
ஸ்ரீ சாய் குடியிருப்பு நான்காவது தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத மூன்று பேர் வீரபாண்டியனை வழி மறைத்து கத்தி மற்றும் இரும்பு ஆயுதங்களால் கடுமையாக தாக்கி உள்ளனர். அப்போது வீரபாண்டியனின் சத்தம் போட அக்கம் பக்கத்தினர் வருவதைக் கண்டு அவர்கள் அங்கு இருந்து தப்பி ஓடினர்.