சென்னை, காசிமேடு மீன்பிடி துறைமுக பகுதியில் மீனவர்களுக்கு சென்னை மாநகராட்சி சார்பில் கரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது. இதில் காசிமேடு அதனை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான மீனவர்கள தடுப்பூசி போட்டு கொண்டனர்.
இதற்கான பணிகளை சென்னை மாநகர ஆணையாளர் ககன்தீப்சிங் பேடி, காவல் துறை கூடுதல் ஆணையர் செந்தில்குமார் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் தினமும் ஆயிரத்திற்கும் அதிகமான படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்று அங்கேயே மீன்வியாபாரமும் செய்து வருகின்றனர்.
கரோனா தடுப்பூசி முகாமை ஆய்வு செய்த ஆணையர் ககன்தீப்சிங் பேடி! இந்நிலையில் தற்போது கரோனா பரவலுக்காக தளர்வுகளின்றி போடப்பட்டுள்ள ஊரடங்கால் அனைத்து மொத்தம் மற்றும் சில்லரை வியாபார மீன்கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
இதனை, சென்னை மாநகர ஆணையர் ககன்தீப் சிங் பேடி காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் படகுகளில் இருந்து மீன்கள் இறக்கும் இடம், மொத்தம், சில்லரை விற்பனை இடங்களை ஆய்வு செய்தார்.
மேலும், விற்பனை மையங்களை திறக்க எதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், விற்பனை மையங்களை கரோனா பரவல் இல்லாமல் எந்த வகையில் திறக்கலாம் என ஆர்கே நகர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எபினேசர், காவல் துறை கூடுதல் ஆணையாளர் செந்தில்குமார், இணை ஆணையாளர் துரை குமார், துணை ஆணையாளர் சுப்புலட்சுமி, மீன் வியாபாரிகள் ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டார்.