சென்னையில் கரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. சென்னையில் தினந்தோறும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கரோனா தொற்று பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். நோய் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக வீடு, வீடாக சென்று மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கரோனா தனிமைப்படுத்தல் மையங்கள், வார்டு தோறும் சிகிச்சை மையங்களையும் மாநகராட்சி ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் நேற்று (மே.9) சென்னை மாநகராட்சி ஆணையராக பொறுப்பேற்ற ககன்தீப் சிங் பேடி மாநகராட்சி எடுத்து வரும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை நேரில் ஆய்வுசெய்தார்.