தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாகன விபத்தில் காவலர் உயிரிழப்பு: அஞ்சலி செலுத்திய ஆணையர் ரவி - விபத்து

குன்றத்தூரில் வாகனம் மோதிய விபத்தில் உயிரிழந்த காவலரின் உடலுக்கு தாம்பரம் காவல் ஆணையர் ரவி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

வாகன விபத்தில் உயிரிழந்த காவலர்
வாகன விபத்தில் உயிரிழந்த காவலர்

By

Published : Feb 9, 2022, 4:25 PM IST

சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு காவலராகப் பணிபுரிந்துவந்தவர் நாராயணன் (23). 2017ஆம் ஆண்டு காவல் பணியில் சேர்ந்துள்ளார்.

இவர், நேற்றிரவு குன்றத்தூர் ஸ்ரீபெரும்புதூர் பிரதான சாலை வழியாகச் சென்றுகொண்டிருந்தார். அப்போது, சிறுகளத்தூர் ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரேவுள்ள சந்திப்பில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி தோள்பட்டை, தலை ஆகிய இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து குரோம்பேட்டை போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர். இந்நிலையில், அவரது உடலுக்கு தாம்பரம் காவல் ஆணையர் ரவி, குரோம்பேட்டை மருத்துவமனையில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

அவருடன் காவல் துறையைச் சேர்ந்த அலுவலர்கள் பலர் இருந்தனர். இதனைத் தொடர்ந்து, காவலர் நாராயணனின் உடல், அவரது சொந்த ஊரான விழுப்புரத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

இதையும் படிங்க:இந்து முன்னணித் தலைவரை கொல்ல முயற்சி: 7 பேர் கைது

ABOUT THE AUTHOR

...view details