தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மேம்பாலங்களில் உள்ள செங்குத்து பூங்காக்களை பராமரிக்க முன்வருபவர்களுக்கு சலுகை - மாநகராட்சி ஆணையர் - commissioner prakask announcement

சென்னை: மேம்பாலங்களில் அமைக்கப்பட்டுள்ள செங்குத்து பூங்காக்களை பராமரிக்க முன்வருபவர்களுக்கு பிணை வைப்புத் தொகை முற்றிலுமாக ரத்துசெய்யப்படும் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

பிணை வைப்புத் தொகை முற்றிலுமாக ரத்து
பிணை வைப்புத் தொகை முற்றிலுமாக ரத்து

By

Published : Feb 21, 2021, 6:28 AM IST

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 15 மேம்பாலங்களில் அமைக்கப்பட்டுள்ள செங்குத்து பூங்காக்களின் பசுமை பரப்பை அதிகரிக்கவும், மாநகராட்சிக்கு நிதிச்சுமை இல்லாமலும் – பெரு வணிக நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், மருத்துவமனை, அமைப்புகள், குடியிருப்பு நலச் சங்கங்கள், அறக்கட்டளை, பொதுமக்கள் ஆகியோர் தத்தெடுப்பு முறையில் பராமரிப்பு பணி மேற்கொள்ள வரவேற்கப்படுகின்றனர்.

தத்தெடுப்பு முறையில் பராமரிக்க முன்வருபவர்களுக்கு பிணை வைப்புத் தொகை முற்றிலுமாக ரத்து செய்யப்படும். தத்தெடுக்க முன்வரும் நிறுவனங்கள், அமைப்புகளின்
பெயர் பலகைகள் சென்னை மாநகராட்சி விதிகளின்படி அமைக்க அனுமதி அளிக்கப்படுகிறது. இதன்மூலம் நிறுவனங்கள் அமைப்புகளின் பெயர்களை பொதுமக்கள் மத்தியில் கொண்டு செல்ல உதவியாக அமையும்.

மேலும் விவரங்களுக்கு ரிப்பன் மாளிகை வளாகத்திலுள்ள அம்மா மாளிகையில் உள்ள பாலங்கள் துறையினை நேரில் அணுகி அல்லது பெருநகர சென்னை மாநகராட்சி இணையதளத்தில் www.chennaicorporation.gov.in உள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கீழ்க்கண்ட மின்னஞ்சல் மூலம் சமர்ப்பிக்கலாம் எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் பிப்ரவரி 26" என்று குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details