தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காவலர்கள் ஒய்வு இல்லம் திறப்பு

சென்னை: பொது மக்கள் தங்களது வீட்டில் சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும் என காவல் ஆணையர் கோரிக்கை விடுத்துள்ளார்.

file pic

By

Published : May 30, 2019, 3:35 PM IST

சென்னை மண்ணடியில் உள்ள ஜாபர் சாதிக் தெருவில் அமைந்துள்ள காவலர்கள் தங்கும் ஓய்வு இல்லம் புதுப்பிக்கப்பட்டு காவல் ஆணையர் விஸ்வநாதன் இன்று திறந்து வைத்தார்.

பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது, பிற மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு அலுவல் பணிக்காக வரும் காவலர்கள், காவல் அலுவலர்கள் ஓய்வெடுக்கும் இல்லம் திறக்கப்பட்டுள்ளது.

இந்த ஓய்வு இல்லம் 2005ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகின்றன. நவீனப்படுத்தி தற்போது இது திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதில் 12 அறைகள் உள்ளன. இதில் 30 காவலர்களும்,24 காவல்துறை அதிகாரிகளும் தங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள காவலர்கள் ஓய்வு இல்லத்தையும் விரிவுப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் பேசுகையில் சைதாப்பேட்டையில் உள்ள வீட்டில் 1.56 கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில் தீவிரமான விசாரணை நடைபெற்று வருகிறது. கொள்ளை நடைபெற்ற வீட்டில் சிசிடிவி கேமராக்கள் இல்லாதது பெரும் சிரமமாக உள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் ஏற்படுவதை கண்டு மக்கள் விழிப்புணர்வோடு அனைத்து வீடுகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

ABOUT THE AUTHOR

...view details