தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் ஒரே நாளில் 33 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் - சென்னையில் 32 காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து சங்கர் ஜிவால் அதிரடி

சென்னையில் 32 காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார். தொடர்ந்து கொலைகள் நடந்துவருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் மாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

சென்னையில் 32 காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து சங்கர் ஜிவால் அதிரடி
சென்னையில் 32 காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து சங்கர் ஜிவால் அதிரடி

By

Published : Jun 4, 2022, 12:29 PM IST

Updated : Jun 4, 2022, 12:35 PM IST

சென்னையில் கொலைகள் சம்பவங்கள் அதிகரித்துவருதாக வருவதாகவும், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவதாகவும் அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தன. இந்த நிலையில் சென்னையில் சட்டம்-ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவில் 32 காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

குறிப்பாக தலைமை செயலக காலனி காவல் நிலைய விசாரணை கைதி கொலை வழக்கில் காவல் ஆய்வாளர் செந்தில்குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இருப்பினும் அங்கு புதிய காவல் ஆய்வாளர் இடம் நியமிக்கப்படாமல் இருந்தது. தற்போது தலைமை செயலக காலனி காவல் ஆய்வாளராக கமலகண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதே போல சென்னையில் பரபரப்பை ஏற்படுத்திய சிந்தாதிரிப்பேட்டை பாஜக பிரமுகர் பாலசந்தர் கொலை வழக்கில் சிந்தாதிரிப்பேட்டை காவல் ஆய்வாளர் சிவசுப்பிரமணியன் சஸ்பெண்டு செய்யப்பட்டார். அந்த இடத்திற்கு தற்போது காவல் ஆய்வாளர் ராஜராம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதே போல எழும்பூர், வேப்பேரி, கோயம்பேடு உள்ளிட்ட இடங்களில் 32 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த வாரத்திற்குள் அனைவரும் பணியிட மாற்றம் செய்யப்பட்ட இடத்தில் பணியை தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: சொகுசு காரில் சிறுமி கூட்டுப்பாலியல் வன்புணர்வு... 5 பேரில் 3 பேர் பள்ளி மாணவர்கள்...

Last Updated : Jun 4, 2022, 12:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details