தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நெருங்கும் தீபாவளி -  சென்னை முக்கிய வீதியில் கூடுதலாக 100 சிசிடிவி கேமராக்கள்! - commissioner cctv launch

சென்னை : தியாகராய நகரில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு கூடுதலாக 100 சிசிடிவி கேமராக்கள், 500 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள் என காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் கூறியுள்ளார்.

commissioner cctv launch

By

Published : Oct 18, 2019, 12:34 PM IST

தீபாவளிப் பண்டிகையானது வருகிற 27ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், அதற்கு முன்னதாக பொதுமக்கள் புத்தாடைகளை எடுக்க துணிக் கடைகளை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை தியாகராயநகரில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி குற்றங்கள் நடக்க வாய்ப்பு அதிகம் உள்ளதால், கூடுதல் சிசிடிவி கேமராக்களை பொருத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் சிசிடிவி கேமராக்களை தொடங்கி வைத்தார்.

தியாகராயநகரில் கூடுதலாக 100 சிசிடிவி கேமராக்கள்!

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 'தீபாவளியை முன்னிட்டு பொதுமக்களின் பாதுகாப்புக்காக தி.நகர், பாண்டிபஜார் காவல் சரகத்தில் உள்ள ரங்கநாதன் தெரு,போத்தீஸ் துணிக்கடை முகப்பு, மாம்பலம் ரயில் நிலையத்தில் புதிதாக 100 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் ஏற்கெனவே 2000 சிசிடிவி கேமராக்கள் தியாகராயநகர் பகுதியில் பொருத்தப்பட்டுள்ளது. தீபாவளிப் பண்டிகை பாதுகாப்புக்காக சுழற்சி முறையில் 500 காவல்துறையினர் ஈடுபடுவார்கள்' எனவும் கூறினார்.

இதையும் படிங்க:

உள்ளாட்சித் தேர்தல் விவகாரம் - அரசாணையை ரத்து செய்யக்கோரிய வழக்கு தள்ளுபடி!

ABOUT THE AUTHOR

...view details