தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாத துவக்கத்திலேயே அதிர்ச்சி..! வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை உயர்வு! - டிசம்பர் மாத சிலிண்டர் விலை

Commercial cylinder price hike: 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை உயர்த்தப்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

Commercial use cylinder price hike
வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை உயர்வு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 1, 2023, 7:06 AM IST

Updated : Dec 1, 2023, 7:26 AM IST

சென்னை:சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மாற்றத்திற்கேற்ப எண்ணெய் நிறுவனங்கள் மாதத்தின் துவக்கத்தில் சிலிண்டர்களில் விலையை மாற்றி வருகின்றன. அந்த வகையின் இன்று (டிச.1) 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னையில் 1,942 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எடையுள்ள சிலிண்டர், ரூ.26.50 உயர்த்தப்பட்டு 1,968.50 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. வணிக பயன்பாடு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு இருப்பதால் உணவகம் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டு வரும் வணிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

முன்னதாக ரக்‌ஷா பந்தன் பண்டியையையொட்டியும், அக்டோபர் மாத துவக்கத்திலும் வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை குறைக்கப்பட்டது. ஆனால் வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை சமீப காலமாகத் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. மேலும், வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் உணவுப் பொருட்கள் விலையும் உயரும் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: Ind Vs Aus : தொடர் யாருக்கு? 4வது டி20 கிரிக்கெட்டில் இந்தியா - ஆஸ்திரேலியா மோதல்!

Last Updated : Dec 1, 2023, 7:26 AM IST

ABOUT THE AUTHOR

...view details