சென்னை போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகளுடன் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் தலைமையில் 14ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை சென்னை குரோம்பேட்டையில் உள்ள போக்குவரத்து பயிற்சி முகாமில் நடைபெறுகிறது.
ஏற்கனவே 3 கட்ட பேச்சுவார்த்தையில் நிலையான முடிவுகள் ஏதும் எட்டப்படாத நிலையில், இன்று (மே12) நான்காம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இந்தப் பேச்சுவார்த்தையில் 66 தொழிற்சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கலந்து கொண்டு ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிகழ்வில் போக்குவரத்து துறை முதன்மை செயலாளர் டாக்டர் கோபால், நிதிதுறை கூடுதல் செயலாளார் அருண் சுந்தர் தயாளன் ஐ.ஏ.எஸ் ஆகியோர் உள்பட தொழிலாளர் முன்னேற்ற சங்கம் (தொமுச), அண்ணா தொழிற்சங்கம் மற்றும் சிஐடியு ஆகிய சங்கங்களும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன. இதில் ஏற்கனவே இடைக்கால நிதியாக ஆயிரம் ரூபாய் அறிவிக்கப்பட்ட நிலையில், முழுமையாக ஊதிய ஒப்பந்தம் குறித்த அறிவிப்பு கையெழுத்தாக வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:அரசு வேலை வாங்கி தருவதாக பல பேரிடம் 2 கோடி ரூபாய் மோசடி - முன்னாள் அமைச்சர் மீது புகார்