தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கடல் நீரை குடிநீராக்கும் நிலையங்களிலிருந்து நீரேற்றும் பணி தொடக்கம் - சென்னை குடிநீர் வாரியம் - seawater treatment plants in chennai

சென்னை: வீராணம் ஏரியில் தூர்வாரும் பணி காரணமாக குடிநீர் விநியோகம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதால், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியம் இரண்டு கடல் நீரை குடிநீராக்கும் நிலையங்களிலிருந்து குடிநீரை பெற தொடங்கியுள்ளது.

chennai
சென்னை குடிநீர் வாரியம்

By

Published : May 7, 2021, 3:19 PM IST

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் ஆண்டுதோறும் கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரியிலிருந்து தினந்தோறும் 180 மில்லியன் லிட்டர் குடிநீரை, குழாய் வழியாக சென்னைக்கு கொண்டுவரப்பட்டு குடிநீர் விநியோகம் செய்கிறது.

இந்நிலையில், பொதுப்பணி துறை அலுவலர்கள், வீராணம் ஏரியில் தூர்வாரும் பணி மற்றும் கரைகளை பலப்படுத்தும் பணி நடைபெற்று கொண்டிருப்பதால், ஏரியிலிருந்து சென்னைக்கு நீரேற்றும் பணியை நிறுத்தி வைத்துள்ளார்கள்.

இதுகுறித்து சென்னை குடிநீர் வாரிய அலுவலர் கூறுகையில், "கடந்த சில நாள்களாக சென்னையில் மெட்ரோ ஏரிகளில் மட்டும் நீரேற்றும் பணி நடைபெற்று, குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. ஆனால், தற்போது வீராணம் ஏரியிலிருந்து குடிநீர் வராததால், இதனை ஈடுகட்ட நெமிலி, மீஞ்சூரில் உள்ள கடல் நீரை குடிநீராக்கும் நிலையங்களிலிருந்து நீரேற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இரண்டு நிலையங்களில் இருந்தும் தலா 100 மில்லியன் லிட்டர் குடிநீர் தினந்தோறும் எடுக்கப்படும்" என கூறினார்.

கடல் நீரை குடிநீராக்கும் நிலையங்களிலிருந்து நீரேற்றும் பணி துவக்கம்

அதே போல, அருணகிரி, உதவி செயற்பொறியாளர் (வீராணம் ஏரி, கடலூர்) நமக்கு தொலைபேசி வாயிலாக கூறுகையில், "தற்போது வீராணம் ஏரியில் நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் ரூ.73 கோடி மதிப்பில் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவருகிறது. கடந்த வருடம் இந்த பணிகள் தொடங்கப்பட்ட நிலையில் இந்த வருடம் இறுதிவரை நடைபெறும். பணிகள் முடிவடைந்த பின் சென்னைக்கு ஏரியிலிருந்து குடிநீர் நீரேற்றம் செய்யப்படும்" எனக் கூறினார்.

தற்போது உள்ள நிலவரப்படி சென்னையில் உள்ள ஐந்து மெட்ரோ ஏரிகளில் 8146 மில்லியன் கன அடி நீர் உள்ளது. அதிகபட்சமாக செம்பரம்பாக்கம் ஏரியில் 2963 மில்லியன் கன அடி நீரும், குறைந்தபட்சமாக கண்ணன்கோட்டை தேர்வாய்கண்டிகையில் 453 மில்லியன் கன அடி நீரும் உள்ளது.

ABOUT THE AUTHOR

...view details