தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'இப்போது அதிமுகவில் இருப்பவர்களை எனக்கு பிடிக்கவில்லை' - நடிகர் செந்தில் - அம்மா இருந்தவரை அங்கிருந்தேன்

சென்னை: அதிமுகவில் இருந்து ஏன் பாஜகவில் இணைந்துள்ளீர்கள் என்ற கேள்விக்கு,"அம்மா இருந்தவரை அங்கிருந்தேன். இப்போது அதிமுகவில் இருப்பவர்களை எனக்கு பிடிக்கவில்லை. அதனால், பாஜகவிற்கு வந்துள்ளேன்" என நடிகர் செந்தில் தெரிவித்தார்.

செந்தில்
செந்தில்

By

Published : Mar 11, 2021, 9:20 PM IST

அதிமுக, அமமுகவில் இருந்து விலகிய பின்னர், நகைச்சுவை நடிகர் செந்தில் தற்போது பாஜகவில் இணைந்துள்ளார்.

சென்னை தி.நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் அக்கட்சியின் சட்டப்பேரவைத் தேர்தல் பொறுப்பாளர் சி.டி.ரவி, மாநில தலைவர் எல்.முருகன், மாநில பொதுச் செயலாளர் கே.டி. ராகவன் முன்னிலையில், நடிகர் செந்தில் தன்னை பாஜகவில் இணைத்து கொண்டார். மாநில தலைவர் எல்.முருகன், அவருக்கு பாஜக உறுப்பினர் அட்டையை வழங்கி வரவேற்றார்.

'அம்மா இருந்த வரை அங்கிருந்தேன்' நடிகர் செந்தில்
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் செந்தில், "பல்வேறு நல்ல திட்டங்களை மக்களுக்கு வழங்கி வருவதால் தற்போது பாஜகவில் இணைந்துள்ளேன்" என்றார். அதிமுகவில் இருந்து ஏன் பாஜகவில் இணைந்துள்ளீர்கள் என்ற கேள்விக்கு "அம்மா இருந்த வரை அங்கிருந்தேன், இப்போது இருப்பவர்களை எனக்கு பிடிக்கவில்லை. அதனால் இங்கு வந்துள்ளேன்" எனத் தெரிவித்தார்.

சட்டப்பேரவைத் தேர்தலில் பரப்புரையில் ஈடுபடுவீர்கள் என்ற கேள்விக்கு," 100% பரப்புரையில் ஈடுபடுவேன் என்றார். தொடர்ந்து, அதிமுகவை ஆதரித்து பரப்புரை செய்வீர்களா என்ற கேள்விக்கு, "தலைமை என்ன சொல்கிறதோ அதைச் செய்வேன்" எனத் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details